Loading...

Category Archives: அனுபவங்கள்

காதோடுதான் நான் பேசுவேன் – இரண்டாம் பகுதி

பல் தேய்த்த பிறகு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியை முற்றிலுமாய் எழுதி தெரிவிக்க முடியாது. படித்து புரிந்து கொள்ள முடியாது. நல்ல யோகா மாஸ்டரிடம் கை கட்டி பணிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – முதல் பகுதி

வலைதள வாசகர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும். சிறிய அளவில் சில விஷயங்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். அனேகமாய் இவை என் அனுபவம் சார்ந்ததாய் இருக்கும். நான் அறிந்ததாகவும் இருக்கும். படித்துப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தையே மேன்மேலும் யோசனை செய்யுங்கள்....

மேலும் படிக்க →

உள்ளே வெளியே

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

கந்தகோட்டம்

வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...

மேலும் படிக்க →

தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது

‌எதிர்ப்பார்க்கவே இல்லை. தமிழக அரசு விருது கிடைக்கும் என்று. இரண்டு வருடங்கள் முன்பு சில புத்தகங்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். பரிசு கிடைக்கவில்லை. சரி நமக்கு தரமாட்டார்கள் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து...

மேலும் படிக்க →

கலைமகள் விருது

நேற்று காலை பத்து மணிக்கு மயிலையில் கூட்டம் துவங்கியது. கலைமகள் வாசகர் விழா என்று அச்சிட்டு அழைத்திருந்தார்கள். என்னை, எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பேச அழைப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்தேன். கீழாம்பூரின் அன்பு...

மேலும் படிக்க →

நான் விட்ட பிறகும் அது என்னை விடவில்லையே – பாகம் 2

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரெண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு...

மேலும் படிக்க →

நான் விட்ட பிறகும் அது என்னை விடவில்லையே – பாகம் 1

விளையாட்டாகத்தான் அது ஆரம்பித்தது. வீட்டில் கடுமையாக அடக்குமுறை. வாலிப வயது வந்ததும் அந்த அடக்குமுறையை மீற வேண்டும் என்று அடிமன அரிப்பு ஏதேனும் செய்ய தூண்டியது. சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். நெஞ்சு நிமிர்த்தி முகவாய் தூக்கி கழுத்தை பின்பக்கம் சாய்த்து...

மேலும் படிக்க →

பாரதி யார்?

இன்று நானும் பாக்யலக்ஷ்மியும் நண்பர் சுந்தரும் பாரதி யார்? என்கிற நாடகத்திற்குப் போயிருந்தோம். எஸ்பிஎஸ் ராமன் இயக்க இசைக்கவி ரமணன் பாரதியாக நடித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நாடகம். அநேகமாய் பாரதியின் வாழ்வு முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் கோர்த்திருந்தார்கள். அவரின்...

மேலும் படிக்க →

தாலேதாலேலோ …

நோயுற்று துவண்டிருக்கும் நேரங்களில் என்னடா நகர முடியவில்லை என்கிற மன அழுத்த நேரங்களில் என் காதில் ஒரு பாட்டு ஒலிக்கும். என் சிறு வயதில் தூங்க வைக்க அம்மா பாடும் பாட்டு. பஜனைகளில் பாடும்பாட்டு. ஒரு மயக்க நிலைக்கு தள்ளும்...

மேலும் படிக்க →