‌எதிர்ப்பார்க்கவே இல்லை. தமிழக அரசு விருது கிடைக்கும் என்று. இரண்டு வருடங்கள் முன்பு சில புத்தகங்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். பரிசு கிடைக்கவில்லை. சரி நமக்கு தரமாட்டார்கள் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து திக்குமுக்காடும்படி தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது கிடைத்திருக்கிறது.

‌விழா குறித்த நேரத்தில் சிறப்புற நடந்தது. மிகப் பெரிய அறிஞர்களுக்கு நடுவே நானும் அமர்ந்திருந்தேன். மேடை இறுக்கமில்லாமல் அமைச்சர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மின் தூக்கியிலிருந்து எனது முன் வரிசை வரை நடக்க வேண்டியிருந்தது மட்டுமே சிரமம். நடுவே ஒரு காபி கொடுத்திருக்கலாம்.

தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கும், அலுவலகர்ளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வாழ்க தமிழ்.