Loading...

Category Archives: ஆன்மீகம்

வெள்ளிப் பதக்கம்

துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும் , சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக் கூடாது என்று பேசப்படுவது அல்ல. துன்பம்...

மேலும் படிக்க →

ஒரு தகவல்

வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம் வாழிய நலம். உடல் நலம் தேவலாம். ஆனால் அதிகம் அலைய முடியாது. அலைய விரும்பவில்லை. ஊட்டியோ, கொடைக்கானலோ எனக்கு ஏற்ற இடமல்ல. என் மயிலாப்பூர் இல்லத்தை கொடைக்கானலாய் மாற்றிக் கொண்டு படித்தும், எழுதியும் வருகிறேன். நீண்ட...

மேலும் படிக்க →

இன்று மயிலை அறுபத்து மூவர் திருவிழா

எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம். தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ...

மேலும் படிக்க →

உள்ளே வெளியே

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

கந்தகோட்டம்

வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...

மேலும் படிக்க →

திருமுக்கூடல்

மார்கழி மாதம். பார்த்தசாரதியைப் பார்த்த பிறகு இன்னொரு பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. நான் சைவன். ஸ்மார்த்தன். ஆனாலும் இவர்தான் முதல் தெய்வம், அவர் முக்கிய தெய்வம் என்ற பாகுபாடு இல்லை. ஹரியும் சிவனும் ஒன்று...

மேலும் படிக்க →

மகாபாரதம் (பாகம் 2) – ஒரு முன்னோட்டம்

இந்த கலியுகத்தில் மக்களுடைய ஒழுக்கம் எப்படி இருக்கும்  என்று உபகேள்வியாக தருமபுத்திரர் கேட்க, மார்க்கண்டேயர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கினார். நாரதரும், கிருஷ்ணரும், தருமரின் சகோதரர்களும், திரௌபதியும் சுற்றியிருந்த பிராமணர்களும் கவலையோடு அவர் பேச்சை கேட்கத் துவங்கினார்கள். கலியுகத்தின்...

மேலும் படிக்க →

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – ஒரு முன்னோட்டம்

பரதா, அமைச்சர்கள், வேலைக்காரர்கள், தந்தை போல் போற்றத்தக்க வயோதிகர்கள், மருத்துவர்கள் மற்றும் அந்தணர்களை உரிய முறையில் கௌரவப்படுத்துகிறாய் அல்லவா. நம் ஆச்சாரியாரை நீ மேன்மைபடுத்துகிறாய் அல்லவா. அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் அல்லவா. சிறிய விஷயங்களையும் கலந்து ஆலோசிக்கிறாய் அல்லவா. விடியல்...

மேலும் படிக்க →

நிலா

“நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா” என்று அந்த அரண்மனை தாதிகள் பாடியிருப்பார்கள். அன்று பௌர்ணமி அல்லவா, சிறிய மேகங்கள் நகரும் சித்திரை மாதம் அல்லவா, மேகங்கள் நகர, நிலவும் நகர்வது போலத்தானே இருக்கும். நிலா ஓடுவதும், மேகத்தில் மறைவதும்,...

மேலும் படிக்க →

லயம்

இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன். மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம்...

மேலும் படிக்க →