Loading...

All posts by admin

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 3

” இன்னொரு பிறவி எடு.உன் ஆசை எதுவோ அதைத் தீர்த்துக் கொள். ஆசை தீர வைகுண்டம் தானே வரும். ஆசை விடு… விட்ட இடம் வைகுண்டம். ” ” புரிகிறது. ” ” இந்தா… ” தீர்த்தப் பாத்திரத்திலிருந்து நீர்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 2

இன்று கிழவி சாமந்தியும் துளசியுமாய் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் கணிகண்ணன் பறித்துக் கொண்டு வந்தவை. தடவித் தடவி பூ எது துளசி எது என்று பிரித்துச் சரம் கட்டிக் கொண்டிருக்கிறது. நாற்பது கை தொடுத்திருக்கும். ” என்ன இன்று கைங்கர்யம்...

மேலும் படிக்க →

நாத்திகம்

வழக்கம் போல் உறக்கமில்லை. நாத்திகமென்பது எதிர்மறை சிந்தனை, திமிர் , உறண்டை வம்புக்கிழுப்பது என வெளிபடும் போது நோய்த் தன்மை பெறுகிறது. தேடித் தேடி …. கடவுள் இல்லையெனத் தெரிந்து விட்டால் அப்புத்தி கூர்மையாகப் பேசும். ஆசையே வியாதிக்குக் காரணம்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 1

அது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட வெண்தாடியும் பொன்னிற உடம்பில் போர்த்திய சால்வையும் அங்கங்களில் அளவாய்ச் சாத்திய திருச்சின்னங்களுமாய்க் கண்மூடி மெல்லிய நிரந்தரச் சிரிப்போடு தன் நினைவற்றுப் பரமானந்தம் லயித்திருந்தது. கணிகண்ணன் இன்னும் அருகே போய் உட்கார்ந்து அதைத்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நிறைவாக எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எதன் நிறைவாக? இந்த கேள்வி, பதில் பகுதியின் நிறைவாகவா? ஆமாம். இந்த பகுதி இந்தக் கேள்வியோடு முடிகிறது. என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது...

மேலும் படிக்க →

எழுபத்தி இரண்டு

குருப்யோ நம: கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரியாளயிட்டப்பா என் வயதுடையோர் மெல்லியதாக பொறாமையோடு அங்கீகரிக்கிறார்கள். ஆனால் என் இருபது வயதில் நான் எதற்கும் லாயக்கில்லாதவன். உண்பதற்கு அமரும்போது என் தகப்பன் என்னை...

மேலும் படிக்க →


மேய்ப்பன்

” டாய்!” பின்னால் குரல் கேட்டது. நான் விட்டமின் மாத்திரைகளும் காட்லிவர் ஆயிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதிச் சில்லறைக்கு காத்துக் கொண்டிருந்தேன். எதிரே கடை ஆள் எனக்கென ரூபாய் நோட்டு எண்ணுவதை பிசகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “டாய்!” மறுபடி குரல்...

மேலும் படிக்க →

வேதத்தின் முதல் பாடம்

இரும்பு குதிரைகள் குதிரைகள் பசுக்கள் போல வாய் விட்டு கதறுவதில்லை வலியில்லை என்பதல்ல வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குக்காப் பணிந்து போகும் – இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்.

மேலும் படிக்க →