வழக்கம் போல் உறக்கமில்லை.

நாத்திகமென்பது எதிர்மறை சிந்தனை, திமிர் , உறண்டை வம்புக்கிழுப்பது என வெளிபடும் போது நோய்த் தன்மை பெறுகிறது. தேடித் தேடி …. கடவுள் இல்லையெனத் தெரிந்து விட்டால் அப்புத்தி கூர்மையாகப் பேசும். ஆசையே வியாதிக்குக் காரணம் என்பதென. அதாவது கடவுளல்ல முன்வினையல்ல உன் ஆசையே உன் வியாதிக்குக் காரணம்.

எது வியாதி? உடல்

நோயா? இல்லை. எல்லா பயமும் பதட்டமும். இங்கே நாத்திகம் பதட்டம். எது ஆசை? ஏகப்பட்டது. உன்னை கொம்பன் என நினைத்துக் கொள்வது. எல்லாந்தெரியும் என்கிற பக்குவமின்மை. நாத்திகம் மிகப் பெரிய தபஸ். அது பேசாது. வாழும். அப்போது பேசுவதெல்லாம்? போங்கு.

தன்னை முன்னிலைப்படுத்த படுத்திக் கொள்வது. காவி தலைப்பாயும் தங்க ருத்ராக்ஷம் அணிவது போல உன்னுடையது கருப்பு வேடம். கபட நாடக வேடதாரி.

ஆத்திகம் இன்னும் கடினம். ஆன்மீகம் பக்தியல்ல. அது ஆரம்பம். வழி முறை. இதன் முடிவு தன்னையறிதல். இது பெரும் பிரம்மிப்பு. கடவுள் நெருக்கம் வேடம் போடுமோ. இதுவும் வாழும். தானாய் மக்கள் வந்து அழுவார்கள். பகவான் ரமணர் இதனால்தான் நாத்திகத்துக்குத் தன்னை அறிந்தோர் பதில் சொல்வதில்லை. சிலை என்பது வழிபாடு. வழிபாடு கூடாதென்பவன் சிலை வைப்பானோ? அறியாத்தனம். உன் பெண்டிரை வழிபாட்டிலிருந்து விலக்கேன். பயம். மற்றவர் சடங்கை மறுத்தலுக்கு அறிவு தேவையில்லை. அடாவடித்தனம் போதும். வழிபாடு என்றால் ஒரு வழியில் நிற்றல். அதிட்டானத்தில் நிற்றல். எது உண்மை எனக் கூர்ந்து இருப்பதே அதிட்டானம். மையம்.

எதற்கு பல் துலக்குகிறாய்? ஆதி தமிழன் பல் துலக்கினானா. அது காலம் தந்த பழக்கம். வித விதமாய் இப்பழக்கம் மாறும். விக்ரக வழிபாடும் பழக்கமே. குத்து விளக்கொளியில் நின்ற கடவுளுருவம் இன்று மின்னொளியில். இருபது வருடம் கழித்து கடவுளுருவம் 3D யில் வீட்டுள் மிதக்கும். வழிபாடு இங்கே ஒரு பழக்கம். அழியாது. அதிகமாகும். நாத்திகம் இங்குள்ளோர் பேசிய பின்னரே கோயில் கூட்டம் பெருகியது. இன்று மறுபடி ஏன் நாத்திகம் உரத்து பேசப்படுகிறது? ஆத்திகத்தின் அயோக்கியத்தனங்கள் காரணம். வேடதாரிகள் காரணம். சட்டென்று ஒரு ஞானி சத்புருஷன் வர நாத்திகம் வெலவெலத்துப் போகும். சத்யத்தின் முன்னே கூச்சல் குரைப்பு வராது. இது புதிதல்ல. காலம் காலமாய் நடக்கும் விஷயம்.

[முகநூல் பதிவு 29-July-2017]