முழுமையான அன்பின் நிலைக்குப் பெயர் தாய்மை. ஆம். அவர் தாயுமானவர்.தன் எழுத்துக்களால் வாசகர் இதயங்களில் ஊடுறுவி என்றென்றும் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் நம் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா தன்னைச் சுற்றி அன்பெனும் சாம்ராஜ்யத்தை நிறுவியவர். எண்ணற்ற பேரன்பு கொண்ட இதயங்களை சம்பாதித்தவர். அந்த பேரன்பு உடையார் சாம்ராஜ்யம் இவ்வுலகில் சூரியர் சந்திரர் உள்ளவரை ஆளும். அங்கு எல்லோரும் கட்டளை இல்லாமல் விருப்பத்தோடு பணிந்தனர்.தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும்,தனக்கு கட்டளை இட மாட்டாரா எனவும் ஏங்கிய நெஞ்சங்கள் உண்டு.அந்த பேரன்பு உடையார் தாயுமானவர் நம் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயாவின் www.writerbalakumaran.com என்ற வலைதளம் 95 நாடுகளுக்கும் மேலான வாசக நெஞ்சங்களை கொண்டிருப்பதில் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.