இனி தொடர்ச்சியாய் பண்டிகைகள்தான். பண்டிகைகளில் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். பிள்ளையார் வாங்குவது குழந்தைகளுக்காக. என் வீட்டில் குழந்தைகள் இல்லை. வாங்கி பெவிகால் உதவியோடு இரவு இரண்டு மணிக்கு கண்கள் வைத்தேன். வேறு எவருமில்லையே. பிறகு மனம் பார்க்க துவங்கியாயிற்று. ஆர்யக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது இதுவே. சடங்குகள் ஆர்யக்கூத்து. மனித கார்யம் அவதானிப்பு. எதையும் நீயாக விடக் கூடாது தானாய் விடுபட வேண்டும். மறந்து போனதுபோல் நகர்ந்து போய்விட வேண்டும். சிகரெட் சில முட்டாள் நட்புகள் அப்படி போயின.

பண்டிகைகள் அப்படி போகாது. முன்னே வந்து முட்டும். பட்டும் படாமலும் இருக்க வேண்டும்.

வேறெது இப்படி பட்டும் படாமலும்? கோவில்கள். பிறகு பிரசங்கங்கள். பிறகு..? உணவு பிறகு ? உடை. பிறகு உறவுகள். சர்தான் போடா… உங்கள் குரல் கேட்கிறது. விலகுகிறேன்.

[Aug 29th 2014 முகநூல் பதிவு]