குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை.

நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை மிக மிகப் பெரியது. நாம் நம் மனதை ஆராயவில்லை அந்த சோதனையில் ஈடுபடவேயில்லை. (முன்னோர்கள் மனம் கற்று தெளிந்திருந்தார்கள்) ஆனால் பிற்பாடு
வெளியே சுற்று சூழ்நிலைக்கு வந்து விட்டோம். உடம்புக்கு வெளியே இருக்கிற பஞ்ச பூதங்களை பிரித்து ஆராய்கிறோம். அங்கே குட்டிக்கரணம் போடுகிறோம். பஞ்சபூதம் உள்ளே உண்டே. அந்த உள் நீர் தெரிய வெளியே உள்ள நீர் நம் வயமாகுமே.

இது விதி. தலையெழுத்து. இது இந்த யுக நிலை. மனம் தெரிந்தோர் குறைந்து போய் விட்டனர். மனம் பற்றி தெரியதோர் பேச்சு எடுபட்டது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என பெரிய ஆராயச்சியாளனாக சமூக பொருளாதார மத ஜாதி சிந்தனையாளனாக நடிக்கிறார்கள்.

இளம் வயதில் கட்சி கட்டக் கூடாது நடு நிலையாளனாக நிற்க வேண்டும். முதுமையில் தெளிவு கிடைக்கும். உண்மையை தேட வேண்டும்.

நான் விஜய்பக்கம் அஜித் பிடிக்காது. இவரு வாழ்க. பார்ப்பான் ஒழிக இவையெல்லாம் நோய்கள். வலிவான இளைஞர்களிடையே நிதானமில்லை. இது வருத்தம்தான்.

(21 பிப்ரவரி 2018 முகநூல் பதிவிலிருந்து)