
எழுத்து சித்தர் பாலகுமாரன் பற்றிய ஒரு அறிமுகம்

தனது எழுத்துக்களால் லட்சக்கணக்கான வாசகர்களின் வாழ்வை மேம்படுத்திய, உலகறிந்த மகத்தான எழுத்துச்சித்தர் சற்குரு ஸ்ரீ பாலகுமாரன் அவர்கள். எழுத்துலகின் எல்லைகளைக் கடந்து, ஒரு ஆழமான ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார். திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களின் பேரருள் பெற்ற பிரதம சீடராக, அவரது வாழ்வின் லட்சியம் இலக்கியத்தையும் தாண்டி, ஆன்ம விழிப்புணர்வை நோக்கியதாகப் பரிணாமம் கொண்டது.
தன் குருநாதரின் திருவடி நிழலில் தான் அனுபவித்த அந்தப் பேரானந்த ஆன்ம உயர்வை, பரந்த இந்த உலகிற்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே அவரது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது. மானுடப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும், இந்தப் பிறவியிலேயே ‘ஆத்ம தர்ஷன்’ எனும் அக விழிப்புணர்வை எய்திட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவரது முதன்மைத் தத்துவமாக அமைந்தது.
மெய்ப்பொருளைத் தேடும் தாகம் கொண்ட சாதகர்களை, இறைத் தன்மையை நோக்கி உள்முகமாகத் திருப்பிய ஞான குரு அவர். இந்த பௌதீக உலகை விட்டுப் பிரிந்த பின்னரும், தகுதியுள்ள சாதகர்களிடம் அவரது சூட்சுமப் பணி இன்றும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த மகானின் புனிதத் திருவடிகளைப் பின்பற்றி, அவரது போதனைகளையும், அவர் காட்டிய நல்வழியையும் சமுதாயத்திற்கும், உண்மையைத்தேடும் சாதகர்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. சாதி, மதம், இனம், மொழி மற்றும் தேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரையும் அரவணைக்கும் குருநாதரின் உலகளாவிய போதனைகளைச் சற்றும் பிறழாமல் கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.
குருநாதருக்கான ஆலயத்தை அமைத்துப் பராமரிப்பதிலும், அதை ஒரு துடிப்பான வழிபாட்டுத் தலமாகத் திகழச் செய்வதிலும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். கூட்டுப் பிரார்த்தனை மற்றும் தியானத்தை ஊக்குவிக்கும் வகையில் வழக்கமான சத்சங்கங்களை நடத்தி வருகிறோம்.
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய நம்பிக்கையின் அடிப்படையில், எழுத்துச்சித்தர் வழிகாட்டியபடி பக்தர்களுக்கும் ஏழை எளியோருக்கும் அன்னதானம் வழங்குவது இந்த அறக்கட்டளையின் மிக முக்கியப் பணியாகும்.
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில், அவரது நூல்களின் முழுமையான தொகுப்பைக் கொண்ட நூலகத்தைப் பராமரித்து வருகிறோம். மேலும், தகுதியுள்ள மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கி ஆதரிப்பதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகப் பயிற்சிகளை வளர்க்கவும் பாடுபடுகிறோம்.
சற்குரு ஸ்ரீ பாலகுமாரன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து நிலைநிறுத்த, உங்களின் தாராளமான பங்களிப்பு பேருதவியாக இருக்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நன்கொடையும் எங்களின் ஆன்மீகப் பணிகள், சமூக அன்னதானம் மற்றும் கல்வி உதவித் திட்டங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது. இந்தத் தெய்வீக ஒளிவிளக்கைத் தொடர்ந்து ஏந்திச் செல்ல எங்களோடு கைகோருங்கள்.
UPI மூலமாக பகிர,

NEFT/IMPS/RTGS மூலமாக பகிர
Account Name: சற்குரு ஸ்ரீ பாலகுமாரன் ஆத்மதர்சன் டிரஸ்ட்
Account Number: 50200055822653
Bank: HDFC Bank
Branch: பல்லாவரம் கிளை
IFSC Code: HDFC0002050
எண் 6, 4வது குறுக்குத் தெரு,
(17வது தெரு, சங்கர் நகர்),
மூவேந்தர் நகர், பம்மல்,
சென்னை – 75.
தொடர்புக்கு: 94534 73050, 97908 69145