கேள்வி: நான் முன்கோபம் உள்ளவனாக இருக்கிறேன். கோபத்தில் கூச்சலிடுகிறேன். வேறு ஏதாவது வன்முறையில் ஈடுபடுகிறேன். என் வீட்டார் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். என் கோபத்தை குறைக்க என்ன வழி?

ஒருவர் கோபத்தால் வீட்டை அடக்குவது என்பது அபத்தமான விஷயம். வீடு அடங்கி இருக்க கோபம் அவசியம் இல்லை.

கோபத்தை குறைக்க மூக்கின் நுனியை பார்க்க வேண்டும். பார்த்தபடி சுவாசிக்க வேண்டும் என்று போகர் சொல்கிறார். இது எனக்கு என் குருநாதர் பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்லிக் கொடுத்தார்.

பிராணயாமம் தினமும் நன்கு செய்கிறவர்களுக்கு எந்த உணர்ச்சிகளும் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும். மிகுந்த நிதானத்தில் இருக்க பிராணயாமம் உதவும். மூச்சு பேச்சோடு சம்பந்தப்பட்டது. பேச்சு எகிறல் மூச்சினால் ஏற்படுவது. மூச்சை கவனிக்க பேச்சு நிதானப்படும்.