Loading...

Monthly Archives: February 2019

போர் வீரன் – பகுதி 3

அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில்...

மேலும் படிக்க →

குண்டலினி

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 2

பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. “எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள். ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத்...

மேலும் படிக்க →

போர் வீரன்

‌இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்து போனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். வெட்டுப்பட்டுத்தான் ஆக...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நான் காதலித்தப் பெண்ணை வேறொரு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.எனக்கு வாழ்க்கை இடி விழுந்தது போல் ஆகி விட்டது.என்னால் அவளை மறக்க முடியவில்லை. மறந்துதான் ஆக வேண்டும். மறப்பதற்கு எளிய வழி வேறொரு பெண்ணை காதலிப்பது. முடியாது என்று...

மேலும் படிக்க →

யுத்தம்

ஒரு நாளைக்கு 120 சிகரெட்டுகள் இழுத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நுரையீரல் செயல் திறன் பாதிக்கப்பட்டது. அதாவது 25 சதவிகிதம் தான் வேலை செய்யும். அதிகம் ஆட, ஓட தாவ முடியாது. ஒரு மாதிரி இளமையில் முதுமை....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 8

ஐந்து வீடுகள் கூட கொடுக்க மாட்டேன். ஐந்து ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்பதால் சண்டையாம். இது யார் நிலம். யாருக்குத் தருவது. என் சொத்து என்று நிலத்தை எப்படிச் சொல்வது. கோடானு கோடி ஜனங்கள் வாழ்ந்து...

மேலும் படிக்க →