இந்த முறை பூஜை படு அமர்க்களமாக நடந்து முடிந்தது. என் ஈடுபாடு பற்றி கவனியாமல் மற்றவரை கவனித்து வந்தேன். கடவுள் நம்பிக்கை அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பிறகு கடவுள் மறந்து கொண்டாட்ட நியதிகள் மட்டும் கவனம் பெறுகின்றன. யோசித்துப் பார்த்தால் நியதி (system) கடவுள் இரண்டும் ஒன்றே. இடது பக்கம் சரஸ்வதி வலது பக்கம் லக்ஷ்மி என்று ஏதோ நியமங்கள்.

நிறைய பேர் வீட்டில் இப்போது கொலு வைப்பதில்லை. காரணம் கடவுள் நம்பிக்கை கேள்விக்கு குறி. நல்லா படிச்சா நல்ல மார்க், நல்ல மார்க் நல்ல வேலை. இங்க கடவுள் எங்கே. இது பொம்மை சார் இதுவா என்ன காப்பாத்தும். காசுக்கு பிடிச்ச கேடு நவராத்திரி. முதிர்ந்த பெண்பிள்ளை பேசினார். துடைச்சு பெருக்கி சமைச்சு இறக்கி …போர். சுற்றியுள்ள உலகம் கேட்காத வண்ணம் காதில் பட்டன் அழுத்தி பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னமா இருக்கு ம்யூஜிக். ஐநூறு வருடத்து முன்பான பாட்டு ஆயிரம் வருடத்து முன்பான ராகம் அதேதான் இன்றும்.

ஆனால் அந்தப் பாரம்பரியம் தெரியாது. கல்யாணி காம்போதின்ன என்ன? பொம்மனாட்டி பேரு பதில் சொல்வார்கள். பழசை மறுதலித்து விட்டு என்னமா போடறான் என்பார்கள்.

சுக சுகாம ம்ருதங்க தாளமு…தாள சுகம் அதே. கருவி வேறு. எலக்ட்ரானிக்ஸ் அதிர்வு. உட்கார்ந்த இடத்தில் உடம்பு ஆடுகிறது. கடவுள் நம்பிக்கையும் இடம் மாறி இருக்கிறது. ஒத்தைக்கல், ஜோடி மரப்பாச்சி போய் தத்ரூப சாய்பாபா நெருக்கம். விஷயம் அதே. கிருஷ்ணர் ஏம்மா ஹாஃப் நேக்கட்டா இருக்கார்? குழந்தைக்கு அது ஶ்ரீ க்ருஷ்ணரா வேறு ஏதேனுமா? அம்மாவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. கல்யாணி ராகம் ஒளிந்திருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

நீங்கள் மாறவில்லை மாற முடியாது. பெரிசாய் நீட்டி முழக்கி ரசிப்பவர்களை உற்றுப் பாருங்கள்… சுய அலட்டல் அதிகமிருக்கும். அவரு ரசனை peak ஆம். அதை காட்றாராம். அட முண்டமே.

கடவுள் அறிதலும் காவியம் தெளிதலும் சங்கீதம் புரிதலும் அவ்வளவு எளிதா. உன்னுடையது மனச் சோம்பல்.. வேர் தேடா குணம்.

உலகத்தை உற்றுப்பார். ஏகத்துக்கும் கற்கலாம்.

நான் முதுகுதட்டி குறை சொல்வதேயில்லை. ஏனெனில்…….

[அக்டோபர் 1, 2017 முகநூல் பதிவிலிருந்து]