உ
யோகிராம் சுரத்குமார்
கடவுள்
இந்து மதக் கடவுளர் பற்றி கேலி செய்பவர் உண்டு. அறியாமை.
விநாயகர் தவம். ஆசனசித்தி. உட்காரத் தெரியாதாற்கு உலகம்புரியாது.
சிவம் தியானம். மன ஒருமை. இதுவே மூலம். பேரமைதி. இருந்தும் இல்லாதிருப்பது.
சக்தி பல இடங்களில் இடையறாது இயங்குவது. பூமி உருள்வது. இரவு பகல். துவந்தக் காரணி. வெளிப்படுத்துவது. வாழ்க்கை.
ப்ருமம் ஒரு புள்ளியிலியங்குவது. இதுதான் க்ரியேட்டிவிடி. கவிதை இன்ன பிற கலைகள்.
விஷ்ணு எல்லா சீவன்களிலும் வசிப்பது. உயிர்ப்பு. உணர்ச்சி. தன்னை அறிதலின் துவக்கம். அதாவது பக்தி. பூமி நாயகன்.
முருகர். இதற்கு உண்டானத் தடைகளை வெட்டி எறிவது. வைராக்யம். வேல் போல உறுதி. மன ஒருமையின் மகன். சிவமைந்தன்.
சரஸ்வதி வீணை. ரீங்காரம் உள்ளளுடம்பு சப்தம். உடம்பு அறியாது உள்ளம் தெரியாது.
லக்ஷ்மி உடல். போஷாக்கு. தேஜஸ். பல இடங்களுக்கு அலைவது. ஆரோக்கிய பலம். உடல் வலுவின்றி உள்ளம் பார்க்கத் தோன்றாது. இது இளமை என்றும்.
சனாதனதர்மம் மிக பலமானது. நீண்ட அனுபவப் பரம்பரை. மற்ற மதங்களில் இந்த பலம் இல்லை. அவை துன்பம் நீக்க இன்பம் கேட்க பிரார்த்தனை செய்பவை. மனிதரை மனிதராக வைப்பவை. சனாதனதர்மம், அதாவது இந்து மதம் மனிதரை தெய்வமாக்குவது.
இவை உவமானம். சக்திகளுக்கு ரூபம் கொடுத்த விஷயம். அவ்வளவே.
புரியும் வரை பக்தி துணை வரும். புரிந்து விட்டால் பக்தியில்லை அகன்று விடும். மேம்போக்காய் பிறர்க்காக பேசும். இன்னும் விவரித்து எழுத வேணும்
சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்……
[March 7, 2016 Facebook post]
Kalyanasundaram
Started His career as a movie star, writer and attained saint hood ,
Brahmam ,parinbam.
Guruve namaha .