உ
யோகிராம் சுரத்குமார்
முண்டகக்கண்ணி – பகுதி 1
நானே மயிலை காவலின் நாயகி
நானே உருவம் இல்லாக்காளி
கட்டிட கோவில் எழுப்பிட வேண்டாம்
இருக்கும் கிணறை மூடிட வேண்டாம்
தென்னங் கூரை எழுப்புக போதும்
போகவும் வரவும் அது சௌகரியம்
மயிலை மக்கள் எவரும் வந்தால்
மயிலை தாண்டியும் மக்கள் வந்தால்
அவரவர் குறையை என்னிடம் சொன்னால்
அன்றே தீர்ப்பேன் உடனடி காப்பேன்
சத்தியம் இதுவே கபாலிமீது சத்தியம் இதுவே
உந்தன் மீது சத்தியம் இதுவே
இம் மண்ணின் மீது சத்தியம் இதுவே
அரளி போதும் அர்ச்சனையாக
பாலே போதும் அபிடேகமாக
சூலநடுகல் எனக்கென வைப்பீர்
இறந்த குளத்தை இறுக மூட
சுற்றி தளத்தை உயர்த்தி வைப்பீர்
இரு விரல் உயர தளத்தில் இருப்பேன்
மண்ணில் செய்வீர் திருவாசி போல
அங்கொரு முகமே என் முகமாக
இருப்பேன் இங்கே நெடுநாள் வரைக்கும்
தீர்க்க சுமங்கலி நித்ய கன்னி
கணவன் இருந்தும் கூடா மனைவி
படிப்பில் சிறந்தவள் பதவியும் பெற்றாள்
நீர்நிலக் கிழத்தி நற்குடிப் பிறப்பு
உயிர் பிரி நேரம் கண்கள் இரண்டும்
தாமரை போலே மலர்ந்ததினாலே
கண் வழி உயிரும் போனதினாலே
முண்டகக்கண்ணி முண்டகக்கண்ணி
முண்டகக்கண்ணி என் பேரழுது
முண்டகம் என்பது தாமரை பெயரே
தாமரைக் கண்ணாள் என்பது அர்த்தம்
-தொடரும்
manju sundar
மிக்க நன்றி ???ஆவலுடன் நாங்கள். ஸ்ரீ பாலகுமாரம் ????