உ
யோகிராம் சுரத்குமார்
இன்று மயிலை அறுபத்து மூவர் திருவிழா
எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது
பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம்.
தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ செலவாயிருச்சு என்பது நிர்மூடம். தானம்
தந்தவர் அத்தனை பேருக்கும் பல மடங்கு சுகம் திரும்ப வரும்.
நாயன்மார்கள் அத்தனை பேரும் அள்ளிக் தந்தவர்களே. தன்னை ஈந்தவர்களே.அவர்கள் உலா வருகையில் அவர்கள் பார்க்க வழங்குவது தனி சுகம். இந்த குணம் வளரும், இந்த மனம் தொடரும்.
மயிலை ஒரு புண்ய பூமி.
மதம் தாண்டிய ஒரு பொதுமறை (திருக்குறள்) தோன்றிய பூமி. இந்தக் கோலாகலங்களை எல்லாம் பாராது போதியோ பூம்பாவாய் என்று திருஞான சம்பந்தர் பாடி இறந்தவரை உயிர்ப்பித்த இடம்.
கருணை நிலவு பொழி வதன மதியன் எங்கள் கபாலி வாழும் ஊர். கற்பக வல்லி பொற்பதம் பணிய நற்கதி அருளும் கோயில்.
பேசிப் பேசி பொழுதை அறுக்கும் மனிதரிடையே பேசாதே மெளனம் காத்த வாயிலா நாயனார் பிறந்த இடம்.
வருக வருக மயிலைக்கு வருக.
Neelakantan
Great Festival