Loading...

கவிதைகள்

கண்ணே வண்ணபசுங்கிளியே

உயிர் பூ ஒன்று காம்பு விடுத்து காலில் விழுந்தது.
குளிர் தழுவும் மேகம் தூரல் போட்டது.
அக்கா குருவி உரக்க அழுதது.
நுனிக் கிளை ஒன்றில் காகிதம் நின்றது.
தலைகீழ் நிலையில் அணிலும் நின்றது
வண்ணப் பூச்சி மூடிக் கொண்டது.
எங்கும் எதிலும் வேகமே இல்லை .
எவரும் அதிர்ந்து சிரிக்கவேயில்லை.
உலகம் மயங்கி வியந்து நின்றது என் ஒருவனுக்காக.
சலனமற்ற நிலையே காதல்
சப்தமற்ற நிலையே காதல்
பிளந்து வெளி வரும்போது
Continued →

கண்ணே வண்ணபசுங்கிளியே

இடிகள் முழங்கும் சப்தமாக கேட்கும்
முன்னும் பின்னும் மீன்கள் அலையும்
சப்தம் எதுவும் கேட்டதுண்டா
காதல் என்பது மெல்லிய அலையல்
சப்தம் இல்ல சிரிப்பு போன்றது
அறையின் நடுவே உயிரோடு இருக்கிறேன்
உரத்த சப்தம் எதுவும் இல்லை. கனவுகள் மட்டும்
இடம் வலமாக ஒரு கவிதை எழுதினேன்
அது மீனின் பேச்சு

முண்டகக் கண்ணி

மயிலை என்பது பெரும் வயற்பரப்பு
வெண்மணல் கடற்கரை முன்னேபரவ
தென்னை மரங்கள் பின்னர் பேசும் வெற்றிலைக் கொடிகள் அகத்திச்செடிகள்
அதன் பின் துவங்கும் தனித்தனி வீடுகள்
நடுநாயகமாய் நம்பியின் மாளிகை
வெள்ளைத் தூண்கள் நாற்புற மாடம்
தரையில் பளிங்கு திண்ணை சிகப்பு
ஒரு கோல் உயரம் விளக்குகள் தொங்கும்
வந்தவர் தங்க மாடியில் கூடம்
அடுக்களை பெரிது அணையா நெருப்பு
அறைகள் ஒன்பது எல்லாம் பெரியது
மச்சில் ஏறி கூச்சல் கேட்டாள்
என்னது அங்கே யாருடை அலறல்
பெரும் புகை வருதே கூரை நெருப்பா
துடித்துத் தவித்தாள் நம்பியின் மனைவி
ஊரில் புருஷன் இல்லா நேரம்
அவளே தலைவி ஆளுமை செய்பவள்.
Continued →

முண்டகக் கண்ணி

சழக்கர் புகுந்தார் மயிலைக்குள்ளே
சதுப்புத் தாண்டி தெற்கே நகர்ந்து
அந்தணர் குடியுள் அதிரப் புகுந்தார்
குதிரைப் படைகள் வேலில் புலிக் கொடி
சழக்கர் என்பது பேச்சில் தெரிந்தது
ஊரை விட்டு உடனே போங்கள்
உங்களை ஒருமையில் விளித்துப் பேசி
அங்கம் அறுக்க தொடையை வழித்து
கங்கே யாதவ் வழுக்கை மண்டை
உரக்க கூவினான் பிள்ளைகள் கொளுத்தி.
அறுவர் அம்மா அந்தணர் பிள்ளைகள்
அடித்து துவைத்துஅதன் பின் மரணம்
கிழவியை கொன்றார் மறவர்கள் செத்தார்
ஓடும் மான்களை துரத்தி கொல்வதாய் பரதவர் குடியை பதற அடித்தார்
Continued →

முண்டகக் கண்ணி

நூறு குதிரை ஆறு பகுதி
உங்களை நோக்கி ஒருபடைவருது
நம்பியின் மனைவி இனி பலபேர் உணவு
ஒற்றைத் தட்டைச் சுற்றியமர்ந்து
யவனர் போல சுவைத்து உண்போம்
சொல்லடா எங்கே நம்பியின் மனைவி
பல பேர் அடித்தார் குதிரைச் சவுக்கால்
மந்தை வெளிக்கு வழியைக் காட்டி
தப்பித்து வந்தேன் உங்களை நோக்கி
மேல் துணி அகற்றி முதுகு காட்டினான்
ரத்த விளாறு எழுபது கோடு
நம்பியின் மனைவி கைகூப்பி அழுதாள்
உழவரை நோக்கி
அவன் மண்ணின் மைந்தன்.

முண்டகக் கண்ணி

அணில் தேடி மரமேறும் கருநாகம் போல்
பகை தேடி சாளுக்யர் மயிலை வந்தார்
ஈட்டிகளில் புலிக் கொடியை பறக்க விட்டு
ஈன புத்தி சாளுக்யர் உள்ளே வந்தார்
தேரொன்றில் பெட்டிகளை அடுக்கி வைத்து
பெரும் செல்வம் போகுதென்றப் பொய்யைச் சொன்னார்.
அல்லிக் கேணி காவலர்கள் பாதை காட்ட
மயிலைக்குக் கருக்கலில் வந்து நின்றார்.
முன்னிருந்தோரும் வந்து
அணைந்து கொள்ள
மயிலையின் காக்கைகள்
அலறின அதிகம்
குரங்கேதோ அலைவதால்
காக்கைக் கூச்சல்
கள் தேடி காலையிலே
குரங்குகள் போகும்
எல்லாமும் அறிந்தது போல்
புரண்டு படுத்தார்
மரணத்தின் வரவினை அறியா மக்கள்.
Continued →

முண்டகக் கண்ணி

நாலாபக்கமும் கொம்புகள் சப்தம்
தெருவில் குதிரைகள் போகும் வேகம்
சோழர் நாயே எழுந்திரு உடனே
பன்றித் தமிழா எழுந்திரு சாக
அதட்டி எழுப்பினார் எழுந்ததும் கொன்றார்
தூண்களில் குதிரைகள் கயிறினைக்கட்டி
துடிக்க அடித்தார் வீடுகள் சரிய
பனிரெண்டு வயது அந்தணர் சிறுவர்
அறுவரைஇழுத்தா மரத்தில் கட்டு
காலிலிருந்து காது நுனிவரை
பிரம்பால் வீறு இளைஞர் மூவரை
அவர் முன் நிறுத்தி கத்தியில் குத்து
மெல்லக் கேளு யாரவன் தலைவன்
வசிப்பது எவ்விடம்
நடந்தன எல்லாம் கூடுதலாக
நசுங்கினர் மக்கள் தவளை போல
தாமரை குளத்தில் யானை இறங்கி
அதன் மதம் குறைக்க குளிப்பது போல
மயிலைக் கிராமம் சிக்கித் தவித்தது
எல்லை ஊருக்கு எப்போதும் கேடு

முண்டகக் கண்ணி

யாரடா பாவி வாசலை உடைத்தது
கேட்ட கிழவியை மூட்டையாய் தூக்கினர்
முன்பல் உடைய மூக்கில் குத்தினர்
எத்தனைப் பெண்கள் எவளிங்கழகி
தலைமுடி உலுக்கி முதுகில் அடித்தனர்
பேச மறுத்தாள் முது பெரும் கிழவி
நெஞ்சில் இறக்கினர் கூரிய கத்தி.
அடி உதைத் தாங்கா அந்தணச்சிறுவர்
சகலமும் சொல்லினர் தாய்வயதுட்பட
விடுதலை வேண்டி கதறி அழுதனர்
சாளுக்யர் சழக்கர் வாய்விட்டுச் சிரிக்க
பார்பனர் என்போர் பாம்பின ஜாதி
எறும்பினம் தனக்கென புற்றுகள் கட்ட
இது போய் உறங்கும் வாடகையின்றி
உளையில் உறையும் ஈனப் பிறவி
அக்கினி வளர்த்து வயிற்றைக் கழுவும்
இவரைக் கொளுத்து மரத்தோடு சேர்த்து
கங்கே யாதவ் கட்டளையிட்டான்
பிள்ளைகள் அறுவரும் சாம்பற் ஆயினர்
பெற்றோர் பார்க்க தீயில் பொசுங்கினர்
அம்மேலை தேசம் பெரும் பழிக்கொண்டது

முண்டகக் கண்ணி

வீட்டையிடித்து முகத்திலடித்த
யானை எதிர்க்க சிறிதொரு ஊசி
அலறித் தவிக்கணும் அப்பெரும் சோழம்
கவலை சூழணம் சாளுக்யம் நினைத்து
குழந்தைகள் கொல்லணும் பெண்ணை ஆயினும்
கிழவரை வீறணும் குதிரை சவுக்கால்
எத்தனைப் பெண்டிர் எம்மிடம் கவர்ந்தாய்
உம் பெண்டிர் பலரை அம்மணமாக்கணும்
எந்த திசையடா மயிலை கிராமம்
யாரதன் தலைவன் எங்கே வாசம்?
கங்கே யாதவ் கங்கே யாதவ்
சரித்திரம் சொல்லிய கருப்புப் பெயரிது
மயிலை நம்பி தலைநகர் அலைய
கங்கே யாதவ் கடற்கரைத்தொட்டான்
புலவர் போல இரண்டாளனுப்பி
பிழைப்புத் தேடும் உழவர் போல
மேலும சில பேர் உள்ளே அனுப்பி
காற்றால் மாறிய பரதர் போலே
அடுக்கடுக்காக ஆட்கள் அனுப்பி
காத்திருந்தான் அக் கங்கே யாதவ்
மயிலை நம்பி பொற்கிழி வாங்க
உள்ளே நுழைந்தான் இருபதுக்கு பேருடன்.

முண்டகக் கண்ணி

மன்னர் மன்னா பண்டிதச் சோழரே
வெகு நாள் முன்பு காடாயிருந்த
தென்திசை நோக்கி கங்கைநதியின்
மக்கள வந்தனர் பலகுழுவாக
அந்தணர் மறவர் ஏனைய குலத்தார்
எல்லாமிருந்தனர் ஆயினும் வழியில்
வித வித இடைஞ்சல் காட்டுத்
தீயொடு இயற்கைச் சீற்றம்
ஒருபிடிஉணவு கிடைக்கா பெருவெளி
குலவழி அழிந்தது கொள்கை போச்சு
உயிர் வாழ்வென்பதே பெரும் பாடாச்சு
எதுவும் இல்லை எல்லாம் ஒன்றென
வந்தவர் கலந்தனர்....மனு பொய்யாச்சு
பதிலைச்சொல்லடா கதையார் கேட்டார்
யாரோ அதட்ட மன்னர் முறைத்தார்
ஓலை நாயகம் உடன் வேளியேறும்
இதறிவோர் பெருசபை குறுக்கே வந்தால்
பிரம்பே பேசும்
மயிலை நம்பி மனதுள் துதித்தான்
வரகுண கணபதி வழியைக் காட்டும்.
Continued →

முண்டகக் கண்ணி

அவரை துவரை கடலைப்பருப்பு
செந்நெல் அரிசி வெள்ளைக் கரும்பு
வெற்றிலைக் கொடியொடு கீரை வகைகள்
பழமுதிர்ச்சோலை மயிலையில் உண்டு
வெல்லப் பாயசம் அன்றே பிரசித்தம்
ஆடும் கோழியும் உண்ணக் கிடைக்கும்.
வந்தவர் தங்கினார் விருப்பத்தோடே
மக்கள் வியந்தனர் அவர் கோலம்கண்டு
ஆயினும் உதவினார் அது சிவனின் தொண்டு
சிவனை உணர்ந்த அத்திருக்கூட்டம்
லிங்கம் வைத்து கோவில் எழுப்ப
ஆகமப் பக்கம் திரும்பினர் மெல்ல
மண்டபம் கட்டி வழங்கினர் நீறு
அன்றவர் வைத்த சிலையே கபாலி
குன்றில் நின்ற கோட்டைக் கோயில்
காலைத் தொடர்ந்த வாலும்போச்சு
கா..பாலீக கொள்கையும் போச்சு.
இறைவழி என்பது பேய்வாழ்வல்ல
மறைநெறிக் கூட்டம் அதுவே எஞ்சும்.
Continued →

முண்டகக் கண்ணி

இதுவே மயிலை சரிதம் மன்னா
ஸ்தாபனம் செய்தது காபாலிகரே
இன்றோ பூசை நிறையந்தணரே
கருணை நிலவு எங்கள் கபாலி.
முடித்தான் நம்பி விழுந்து எழுந்தான்
அற்புதப் பேச்சு அரசவை திகைத்தது
தத்துவச்செறிவு புலவர் பொருமினர்
யாரடா பாலகன் மறவர் வியந்தனர்
மன்னர் சிரித்தார் பெருமிதத்தோடே
மயிலை என் நகர் இவனென் மகனே.

முண்டகக் கண்ணி

அஃதொரு காலம் சோழர்
பரம்பரை புலிக் கொடியோடு
ஊர்வலம் போன காலம்
நல்லதோர் வீணை செய்து
அதில் நயம் படத் தமிழுமேற்றி
நாரியர் நடனம் ஆட
ஊர்சனம் மகிழ்ந்த காலம்
உழைக்கவே வண்டல்வயல்கள் கரைமுட்டுமோர் காவிரிப் பெருநதி
தரிசென நிலமேயில்லை மழை
பெய்வதால் எல்லாம் பச்சை
கத்திரி புடலை மற்றும்
மொச்சையும்கீரைவகையும்
கையெட்டும் உயரத்தில்
கிளிமூக்கு மாங்காய்கொத்தும்
தாமரை வள்ளிக்கிழங்கு
கம்புடன் கேழ்வரகு
செந்நெல் அரிசி்வகைகள்
நீர்மிகு கரும்புத்தோட்டம்
Continued →

முண்டகக் கண்ணி

தேனடை பலாப்பழங்கள்
உப்பிட்ட மீனும் கறியும்
பனையுடன் தென்னங்கள்ளு
புளித்தத் தேன் புதைத்தச்சோறு
வெற்றிலை பச்சைப் பாக்கு
வெறும் வாய்க்கு வெல்லஅவலு
எருமைத் தயிர் ஏடுடன் உண்ண
பசும் பால் குழந்தை உணவு
வேறெங்கு சொர்கம் சொல்வீர்
சோழதேசத்தைத் தவிர மக்காள்
காவிரிமட்டுமில்லை தென்வட
பெண்ணை நதியும்
வற்றாத சோழகங்கை
வளமிக்க குளங்கள் நூறும்
கரைதெரியா கடல்போலிருக்கு
வீர நாரண ஏரியோடும்
அணிகலன் பூட்டப்பெற்ற
நங்கையே சோழதேசம்
அரசனே நிலத்துக் கணவன்
அன்போடு சர்வாதிகாரம்.

முன்கதைச் சுருக்கம்

மீன்களை வலையில் பிடித்து
குரங்குகள் கரையில் போட்டன
உனக்கெதற்கு இந்த வேலை
உண்ணவா முடியும் உன்னால்?
பார்த்ததோர் ஞானி கேட்டார்.
குரங்குகள் வணக்கம் சொல்லி
நதியிலே மூச்சுமுட்டி
மீனேதும் சாகாதிருக்க
வலையாலே உதவி செய்தோம்
வாழ்த்துங்கள் சாமியென்றன.
ஞானிக்கோ நெஞ்சில் துக்கம்
குரங்குக்கோ புத்தி குறைவு
மீன் எல்லாம் பாறை மீது
யார் வருவார் நம்மை மீட்க?

மெர்குரிப் பூக்கள்

உனக்கென்ன கோவில் குளம்,
சாமி பூதம் ஆயிரம் ஆயிரம்
இனிமையாய்ப் பொழுதும் போகும்
வலப் பக்கம் கடல் மணலை
இடப் பக்கம் இறைத் திறைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே
நாளையேனும் மறக்காமல்
வா

இரும்பு குதிரை

குதிரைகள் கடவுள் ஜாதி -அதைக்
கும்பிடுதல் மனித நீதி
புணர்ந்தபின் குதிரைகள்
ஒருநாளும் தூங்கியதில்லை
பிடரியைச் சிலிர்க்க ஓடும்
பின்னங்கால் வயிற்றில் மோத
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரையாவார்
மறுபடி குதிரையாகி
மனிதரைக் காண வருவார்
குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்குப் பணிந்து போகும்
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்

வெப்பம்

நீரோடு கோலம் காணா நிலைப்படியும்
நெளிந்தாடு சேலை இல்லாத் துணிக் கொடியும்
மலர விட்டுத்தரை உதிர்க்கும் பூச்செடியும்
வாளியும் கிணற்றடியும்
கைப்பிடிச் சுவரும்
வரளுகின்றன – என்னைப் போல்
அவளில்லா
வெறுமையில்

வடு

அம்மா இழுத்த சூடும்
அப்பா இறைத்த வசவும்
இன்னுமிருக்கின்றன –
என்னில்
பசுமையாய் –
நடுமரத்தில் நம் பெயரை
நீ செதுக்கின வடு மாதிரி
நீயோ –
மரம் மாதிரி

மாமிசம் தேடல்

சைக்கிளின் பின்னே மாமிஸம் போக
காக்கை அதனைத் துரத்திக் கொத்த
சேலையைப் பார்த்ததும்
பார்வையில் துரத்தினேன்
காக்கைக்கும் எனக்கும்
வேறென்ன வேலை

வாழ்த்து அட்டை

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயார்க்கின் ஒரு கோணம்
மணமாகி மறந்து விட்ட தங்கைக்குக்கு நினைவோடே
பொக்கை வாய் குழந்தைகள்
காணாதபோது என் கவிதையை, முன் பல்லை
விமர்சிக்கும் நண்பருக்கு கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்கு
ஸீனேரிகள்
அடியே –
போன ஜனவரியில்
புதுப்படத்து அரையிருளில்
காதோரம் நீயிட்ட நீர்த்தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய்
மரபைக் காட்டி
கொண்ட ஒரி கனவையும் குலைத்து விட்ட
உனக்கென்ன அனுப்ப ?
மொட்டை மரம்
புத்தர் படம்
கற்றைக் குழல் ஜானகியின் தனியுருவம் ?
இல்லை --
அட்டைக் கருப்பில்
நீல மசி தோய்த்து, நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்பிகிறேன்
தேடிப் புரிந்து கொள்.

டெலிபோன் துடைப்பவள்

இன்றைக்கு செவ்வாய்க் கிழமை
நிலா பகலில் வரும்
ஆகவே லேசாய்க் கிளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பியே நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
என்றைக்குச் செவ்வாய்க்கிழமை

மெர்குரிப் பூக்கள்

எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ?
நாளை, நாளை மறுநாள்,
நாலு நாள் கழித்து - மெல்ல
ஒரு ஞாயிறு மாலை வெளியில்,
அதை உன்னிடம் சொல்வதெப்போ?
எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
அதைச் சொல்ல ஏன் இத்தனை தயக்கம்
வால் தூக்கி தசைகள் காட்டிப்
பல்லிளித்துக் குளம்பால் கீறும்
எனக்குள்ளே இருக்கும் மிருகம்
உனக்கொரு கால் பிடித்துப் போனால்.

மெர்குரிப் பூக்கள்

இடுப்பை விட்டு எங்கானாலும்
இறங்கமாட்டேன் என்கிறதாய்
அவளின் நினைப்பை இடுக்கிக்கொண்டு
அடங்கள் செய்யுது மனக்குழந்தை
தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி
பறவைகள் போகுது பாரென்றால்
கண்ணை விரித்து கணங்கள் தயங்கி
மீண்டும் தாவுது அவளுக்காய்
அதட்டிப்பார்த்து அன்பாய் சொல்லி
அசிங்கம் என்பினும் பயனில்லை
இறுக்க அவளை இடுக்கிக் கொண்டு
ஜொள்ளை உறியுது மனக்குழந்தை
தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி
பறவைகள் போகுது பாரென்றால்
கண்ணை விரித்து கணங்கள் தயங்கி
மீண்டும் தாவுது அவளுக்காய்
அதட்டிப்பார்த்து அன்பாய் சொல்லி
அசிங்கம் என்பினும் பயனில்லை
இறுக்க அவளை இடுக்கிக் கொண்டு
ஜொள்ளை உறியுது மனக்குழந்தை
மேலும் கீழும் இடதும் வலதும்

மெர்குரிப் பூக்கள்

சிறிதும் பெரிதும் உருவும் அருவும்
எதுவுமற்றுப் பரவிப் பெருகும்
காற்றைப் போல, காற்றைப் போல
சேர்ந்து பிணைவோம் காற்றைப் போல
முரண்டி தேய்த்து மேலே எழும்பி
வானில் பறந்து பூமியில் பாய்ந்து
திசைகள் அற்ற காற்றைப் போல
தேகம் அற்ற காற்றைப் போல
மேலும் கீழும் இடதும் வலதும்

கல்யாண முருங்கை நாவல்

உயிருடன் கலந்தாய் என்று
ஒருமுறை எனக்குச் சொன்னாய்
கலந்து நிஜமா என்று
என்னுயிர் பிரிக்கப் பார்த்தேன்
பிரிக்கையில் தெரிஞ்சு போச்சு
என் உயிரும் காணோம் என்று.

பச்சை வயல் மனது நாவல்

காக்கைகள் கூடித் தின்னும்
யாரிடம் இந்த பொய்கள்
பயத்தினில் பதறும் காக்கை
கூச்சலை அழைப்பு என்பீர்
அழைத்திட்ட காக்கை ஏதும்
அடுத்ததை விடுவதுண்டா?
அது அது வாய் கொள் அளவு
தின்றதும் பறந்து போகும்
கிடைக்காத கோவம் காட்டும்
முற்றத்தில் காக்கை கூச்சல்
மனிதர் காக்கை ஜாதி
இரட்டைக்கண் ஒற்றை வழி.

பச்சை வயல் மனது நாவல்

எனக்குள்ளேயும் எப்போதாவது
இடி இடித்து மழை பெய்யும்
மண் நனைந்து மணம் வீசும்
பூ மலரும் நாற்றங்கால் தலை சிலுப்பும்
வண்ணத்துப்பூச்சி படபடக்கும்
மண் புழு நகர்ந்து நகர்ந்து
உயிர் கிளறும்
இது வசந்தம் தான். இயற்கை தான்.
வரவேற்று பாடத்தான் கவியில்லை
கவிஞனுக்காய் வசந்தம் காத்திருக்குமா.....
காற்று மெல்ல வசந்தத்தைக்
கடத்திக் கொண்டு போகும்
சருகுகள் தரையிறங்கி
பூமி வெடிப்பில் சிக்கிக் கொண்ட
மண் புழுவை மெல்ல மெல்ல மூடும்.

பச்சை வயல் மனது நாவல்

சோ சோ பரண் ஏறி
குருவிகள் ஓடக் கவண் கல்லால்
தினை வயல் காத்த குறவள்ளி
கதைகள் சொன்னார் வானொலியில்
மொட்டை மாடி வெய்யிலிலே
வற்றல் வடங்கள் பாய்ப் பரப்பி
மாடிக்கோல் சகிதம் நானிருப்பேன்
வேப்பங் காக்கை சிறகொடிக்க
சினிமா பாட்டு சில தெரியும்
ஆனை வருமா மாடிக்கு
ஆள்தான் வருமா படியேறி.....?
ஓட்டுச் சரிவில் வாய் பிளந்த
புகை கூண்டருகே பூனைகள்
மெல்லக் குமுறும் வால் குழைத்து
சிரித்துக் கொள்வேன் உதட்டுக்குள்.....

பச்சை வயல் மனது நாவல்

நெஞ்சைத் திறந்தவனை
நேசமிகு சால்வனை
விழியால் அணைத்துவிட்டு
தலையசைப்பில் வரவேற்று
மெல்ல அடி எடுத்து
மலர் மழை தரை துவள
சுயம்வரத்தில் வளம் வந்தாள்
சுற்றியுள்ளோர் வாய் பிளக்க
வழிமறைத்த நரை கிழவன்
பீஷ்மனிடம் உதிர்த்துவிட்டு
வலம் திரும்மி சால்வனவன்
இடம் நோக்கி நடக்கின்றாள்
போர் சென்று குரல் கொடுத்தான்
பொல்லாத பீஷ்மனவன்
மெல்லத் திரும்மி விட்டு
மேலும் நடக்கிறாள் ...

பச்சை வயல் மனது நாவல்

அலியென்று சொல்லிற்று
அம்பை அவள் விலெடுக்க
இருக்கட்டும் குறையென்ன
ஆண்வர்க்க புத்தியது
இன்று வேலைக்கு போகின்ற
என்னருமை பெண் குலத்தை
அலர் தூற்றும் காரியம்
அன்றைக்கே நடந்ததம்மா.

தீபச் சுடர்

மலையின் மீது
கார்த்திகை தீபம்
தீபத்துள்ளே
யோகியின் உருவம்
யோகி நிற்பது
மலையின் மேலே
எல்லாம் ஒன்று
ஒன்றுள் ஒன்று
தீபமும் சுடரே
மலையும் சுடரே
யோகியும் சுடரே
சுடருக் குண்டோ
பேரும் ஊரும்
நாமம் நாமி
அற்றவர் யோகி
பெயரைக் காட்டிலும் சக்தி
அதனைக் கூப்பிடு
அமர்த்தி வழிபடு.

கூவல்

ஏசு சொன்னார்
``பாவிகளை என்னிடத்தே
வரவிடுங்கள்
நான் அவர்களிடத்தே
பிரியமாய் இருக்க
விரும்புகின்றேன்``
எனக்கு பயம் வந்தது
உன்னிடம்
நான் பாவி என்பதால்
வந்தேனா
புண்யம் செய்து புகுந்தேனா?
இரவெல்லாம் யோசிக்க,
விடியலில் புரிந்தது.
நீ விரும்பினாய் வந்தேன்.

ப்ரமம் விரும்பியே
பிரபஞ்சம் தோன்றியது.
சூரியன் வருகையில்
பட்சிகள் கூவின

பட்சிகள் கூவலில்
சூரியன் வரவில்லை.
நீ சூரியன், ஞான சூரியன்

யோகி யோகி என்று கூவுகிறேன்
உனக்காக அல்ல
எனக்காக.

சக்கரம்

அம்மாவுக்கு கால் வலி
குழந்தைகளுக்கு பரீட்சை மும்முரம்
மனைவியருக்கு
வீடு ஆசை, கார் ஆசை.
எனக்கோ புகழ்தாகம்
விருது மோஹம்.
சேற்றிலிருந்து கால் எடுக்க
சேறு இழுக்கிறது ஆழமாய்.
சேற்றில் அலைவதே சிரிப்பாய்
இருக்கிறது.
சேற்றிலிருந்தபடி, சகல நன்மைக்கும்
சூரியனே,
உன்னை நமஸ்கரிக்கிறேன்.
யானையை மீட்க
விஷ்ணு வரவில்லையா?
என்னை மீட்க
நீ இல்லையா.
என் தலை அறுக்க
வந்தது சக்கரம்.
உன் திருநாமம்
யோகி ராம்சுரத்குமாரம்.

ஆசை என்னும் வேதம்

மண் பிளந்து நெல் முளைத்து
உழவர்கள் உவகை கொண்டார்
மலை பிளந்து தங்கம் கண்டார்
தேசத்தில் திண்மை வந்தது
தன்னைப் பிளந்து சிப்பி மிதக்க
மனிதர்கள் முத்து என்றார்
கடல் பிளந்து பாதை போட்ட
யேசுவைக் கருணை என்றார்
உன்னைப் பிரிந்த திருநாளன்று
தரை பிளந்து பேய் மழை கொட்ட
ஜலம் பிளந்து நீயும் நானும்
போனதோர் நிகழ்ச்சி உண்டு
இருள் பிளந்து சாலை விளக்கு
எரிகின்ற ஈர இருட்டில்
என்னிலிருந்து உன்னைப்
பிரிந்தேன்
இது மட்டும் வலியேன் தோழி
பிளவுதான் வாழ்க்கையென்றால்
பேசி சிரித்தவை பொய்யா தோழி?

ஆசை என்னும் வேதம்

காதலித்த அனைவருக்கும்
கனிவான என் வணக்கம்
ஜெயித்தவர் வலது பக்கம்
தோற்றவர் இடது பக்கம்
இரண்டாகிப் பிரிவீர் என்று
மன்மதன் கட்டளை போட
இரு கூறாய் பிரிந்து நின்றது
புவி வாழ்ந்த மக்கள் கூட்டம்
மன்மதன் வில் வளைத்து
வலப்பக்கம் அம்பு போட
ஜெயித்தோர் கூட்டம் கையில்
தங்கநிற மதலைகள் வந்தன
மறுபடி கரும்பு வில்லில்
கணை தொடுத்து இடது போட
தோற்றவர் கைகளில் எல்லாம்
ஆளுக்கோர் கவிதை படித்தன
மதலைகள் வளர்ந்து நிமிர்ந்தன
தோற்றவர் கவிதை படித்தன
கண் கிறங்கி காதலித்தன
மோகத்தீ பூமியை மறைக்க

ஆசை என்னும் வேதம்

காதலித்த அனைவருக்கும்
கனிவான என் வணக்கம்
ஜெயித்தவர் வலது பக்கம்
தோற்றவர் இடது பக்கம்
இரண்டாகிப் பிரிவீர் என்று
மறுபடி கட்டளை கேட்டு
இருகூறாய் கூட்டம் பிரிந்தது
பூமி சுழற்சியின் ரகஸ்யம்
தெரிந்தது

ஆசை என்னும் வேதம்

நீயும் நானும்
பேசிச் சிரித்த இடத்தில்
இன்று
பசும் புற்கள் முளைத்தன
நாளை பூக்கள் மலரும்
மலர்ந்தவை வண்டோடு
மயங்கியே தினமும் பேசும்
நீயும் நானும் கரம் பிடித்து
பேசிய இடத்தில்
காதல் வளரும்
இடைவிடாது நாமங்கு
இல்லாத போதும்.

கரையோர முதலைகள்

மரம் செடி இலைகள் போல
மண் வாழும் உயிர்கள் போல
மூச்சுவிடத் தெரிந்த முதலை
நீருக்குள் எதற்காய் போச்சு
கூடுகள் குகைகள் இன்றி
நீரடியில் உறங்கலாச்சு

கரையோர முதலைகள்

நரிக்குகையில் சிங்கம் மோதும்
குயில் முட்டை காக்கைக் கூட்டில்
காக்கைகள்? மனிதர் வீட்டில்
புற்றுமண்ணில் எறும்பு கட்ட
பாம்புக்கு அதுவே கட்டில்
உன் சுவர் எனது வீட்டில்
என் கலப்பை உனது வரம்பில்
அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்
எண்ணமே முதலைக்கில்லை
நீரடி எல்லாம் இங்கே
பூமித்தாய் கருப்பைப் போல
எல்லைகள் இல்லா தேசம்
திசைகூட அழியும் ஆங்கே
மனிதர்கள் பிரித்துப் போட்ட
நிலம் பார்த்து சோகத்தோடு
அழுவதே முதலைக் கண்ணீர்
தெரிந்தபின் குறை சொல்லாதீர்

கரையோர முதலைகள்

கரையோரம் முகவாய் வைத்து
கதவு போல் வாயைப் பிளந்து
பல்லிடுக்கில் அழுகிப் போகும்
மாமிச எச்சம் கொத்த
பறவைக்குக் காத்திருக்கும்
முதலைகள் சோகத்தோடு
பறவையும் மாமிசம்தானே
பட்டு போல் வாசனைதானே
முதலைகள் தர்மம் மாறா
ஞானிகள் எந்த நாளும்
வஞ்சனையில்லாப் பிறவி
மனிதருள் மாமிச எச்சம்
குப்பையாய் கிடந்த போதும்
ஒரு நாளும் வாயைத் திறவார்
உள்ளதை வெளியே சொல்லார்
சுத்தத்தை விரும்பும் உயிர்கள்
தர்மத்தைக் கட்டிக் காக்கும்
மனிதரைத் தவிர இங்கே
அத்தனை பிறப்பும் சுத்தம்

கரையோர முதலைகள்

புலிகளைப் போல முதலை
மான்களைத் துரத்திப் போகா
காக்கைகளைப் போல எச்சல்
இலைகளை நோட்டம் போடா
எலிகளோ, ஈசல் கொல்லும்
பல்லியோ அல்ல முதலை
கழுத்துவரை நீரில் அமர்ந்து
கரையோரம் பார்த்திருக்கும்
வேட்டைக்கு எறும்பு போகும்
புல்வெளியில் ஆடு மேயும்
உலகத்து உயிர்கள் எல்லாம்
உணவுக்கு பேயாய் பறக்க
வீட்டினில் இரையைத் தேடி
ஏங்குவது முதலை மட்டும்
ஒரு இலை விழுந்தால் கூட
முதலையின் முதுகு சிலிர்க்கும்
ஒரு சுள்ளி முறிந்தால் கூட
முதலையின் முகவாய் நிமிரும்

விடலைகள்

துள்ளித் துவண்டுத் தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்

தோழி

குளத்து முதுகை கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து
அடங்கின நெஞ்சில்
ஆசைகள்
எறிந்து
ஆட்டம் பார்ப்பது அசிங்கம்
யாரும் அறியாது கெட்டிக்கரை உடைக்க
வட்டச் சிற்றலையால் முடியாது
ஓடுகால் நதியல்ல,
எறிந்ததும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.
இது குளம். சலனத்தை
சல்லாபத்தால் மறைக்கத் தெரியாத ஜடம்
பல்காட்டும் உன் பட்டணக்கரை
அலைவரிசையில் நின்று உன் வரிசை காட்டு
இடுப்பு நனைய இளித்து நில்
எழுந்து போ
என்னையும் குளத்தையும்
விட்டு.

ஞானம்

நூலதில் குவிந்து நின்றால்
கலகல காசு சப்தம்
காதுக்குள் குயிலினோசை
சில்வண்டு கண்டாமணியும்
கடலலை போல ஏதோ
கருப்புக் வெள்ளை புரளுமுள்ளே
பித்துக்கு முன்னிலை போலும்
பேய் தாக்கப் பட்டது போலும்
தாய் மகள் வெறுத்து நோக்கி
தறிக்கின்ற ஆசை தோன்றும்
கவலையில் சிக்கவேண்டாம்
கடலை விட ஆழம் மனது
மலை உச்சி அடைய வேண்டின்
தடை பல தாண்ட வேணும்
கலக்கமே இல்லா ஞானம்
கண்ணீரில் ஆரம்பிக்கும்
நான் யாரென்க் கேட்க வேண்டின்
மனம் நூலிலே நிற்க வேணும்

ஞானம்

பட்டப்படிப்புகள் மட்டக் குதிரை போருக்கு லாயக்கில்லை
கணிப்பொறி மென்பொருள்வேலை
காசுதான் விடுதலையில்லை
அவனருள் இருப்பின் நூலில் அழகாக மனம் உட்காரும்
நூலதை விரும்பா மனது
சிறையினில் பிறந்த குழந்தை.
வேறொரு உலகம் தெரியா
மனிதர்கள் பாவப்பட்டோர்
தறி போடக் கற்றுக் கொள்வீர்
உயிர் பிரியும் முன் ஞானம் பெறுவீர்.

சர்க்கரைப் பொய்கள்

காலை வணக்கம் நலமா நண்ப
பற்பசை வேண்டாம் பலாமுரி வேரை
பதமாய் சுட்டு பாதாம் பிசினொடு
கலக்க அரைத்து காலைமாலை
தினசரி தேய்க்க வாய்க்குள் மின்னல்
வருமே கவர்ச்சி
தினசரி கேட்கும் சர்க்கரை பொய்யின்
முதலாம் பொய்யிது மற்றவைத் தொடரும்
ஆற்றுக் குளியல் அத்துணை அற்புதம்
கால்விரல் கடிக்கும் மீனே தனிசுகம்
ஆக்சிஜன் அதிகம் சோப்பு அசிங்கம்
ஷவரில் குளிப்பது கருமம் கருமம்
குளிப்போர் முகத்தை பார்த்துக் குளிக்கும்
பரவசம் வருமா பாத்ரூம் பக்கம்
அரிசி சிகப்பு கத்தரி நீலம்
அவரைப் பச்சை வெள்ளைப் பூண்டு
கலக்கிப் பதமாய் பொங்கல் வைத்தால்
காலன் ஓடக் கழுபிணியகலும்
அமிர்தம் கூட இதுவே செய்முறை.

சர்க்கரைப் பொய்கள்

நடு விரல் நிமிர்த்தி மற்றவை மடக்கி
பெருவிரல் தன்னை இடமாய் சுழற்ற கருப்புத் தேமல் சர்க்கரை வியாதி
ஒற்றை தலைவலி உடனே போகும்.
மூச்சை நிறுத்தி மெதுவே விட்டால்
நெஞ்சில் வலிவு திடமாய் ஏறும்
இந்திரச் சக்கரம் தலைமேல் சுழலும்
அதிகம் செய்தால் உடனுயிர்பிரியும்
கோரைக்கிழங்கு பாறைக் குழம்பு
ஈளைச்சளி பழம் பாளைக் குருத்து
எல்லாம் முக்கியம் பலன்கள் பலவகை
இவ்விதம் நானும் சொன்னவர் வீட்டில்
இப்படி ஏதும் கண்டிலன் உள்ளே
வருடம் நூறு வைத்தியம் போடும்
இதழினை நடத்தும் நண்பரைக் கேட்டேன்
இதிலே ஏதும் உண்டது உண்டா
விரலைகூட மடக்கி நின்றது உண்டா

சர்க்கரைப் பொய்கள்

ஏதுன் பற்பசை எதுன் உணவு
இட்டலி சாம்பார் பொங்கல்தானே
காப்பி குடிக்கும் பழக்கம் தானே
தமிழின் வாணத் தலைமகன் சொன்னார்
எனக்காக வைத்தியம் எனது எழுத்தா
எவரோ அனுப்ப இடக்குறை நிரப்ப
சிலதை ஏற்றுவேன் அதன் செய்முறைவாசகர்.
தோலின் அரிப்பை எலுமிசை நீக்கும்
தேயெனச் சொன்னார் தெரிந்தவர் நண்பர்
தேய்த சில நொடி உயிரே போச்சு
ஆ ஊ சப்தம் அரை மணி ஆச்சு
அரிப்பு ஒரு இதம் இதுவோ ரணகளம்
பாலா எனக்கு இவரே டாக்டர்
ஒரு முறை பேச ஆயிரம் ரூபாய்.
தினசரி தினசரி சர்க்கரைப் பொய்கள்
ஆறுதல் போல நடித்திடு நாடகம்
பட்டணச் சந்தையில் சளிப் பழம் எங்கே
பாதாம் பிசினா பனங் கற்கண்டா

சர்க்கரைப் பொய்கள்

அறிந்தோர் சிலரே மற்றவர் எளியவர்
தோளைத்தடவி உடல் நலம் பேணச்
சொல்பவர் நல்லவர் நம்மவர் போல
ஆயினும் இதனுள் அனுபவம் குறைவு
தங்கபஸ்பம் ஒரு தலைவனைக் கொன்றது
ஆங்கிலமருத்துவர் அறுவர் குழுவொடு
வாழும் பெரியவர் இன்றும் இளைஞர்
வைத்தியம் என்பது வங்கப் பெரும்கடல்
தூயத்திடுவோர்கள் ஞாலப் பெரும்படை
எடுத்தோ கவிழ்த்தோ இயம்புதல் தவறு
இருப்பினும் எல்லா பதிவையும் படிப்பேன்
அவை எனக்குப் பிடித்த சர்க்கரைப் பொய்கள்.

பயணிகள் கவனிக்கவும்

வெள்ளை அங்கி, சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் மிகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெல்ல நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே
'எதற்கு வந்தீர் இவ்விடத்தில்,
என்ன வேலை மானுடத்தில்?'
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
'மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆள விடமாட்டேன்
Continued →

பயணிகள் கவனிக்கவும்

உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்.
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர -
ஓடிப்போச்சு நாயெல்லாம்,
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது...
'என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு,
எதற்கு வந்தீர் விளையாட?'
- துக்கத்தோடு புலம்பியதை,
Continued →

பயணிகள் கவனிக்கவும்

குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக…
'நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்,
எம்மை விரும்பி அழைப்பீரோ?
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது வார்த்தைதான்
என்ன என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்...
கேட்டவர்தானே வரம் பெறுவர்'
தீபங்கள் வணங்கின தலை குனிந்து -
'ஏசு ஏசு' என்றபடி
என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா.

பயணிகள் கவனிக்கவும்

பட்டணத்துச் சாலையிலே
சேறு வயல் இல்லை...
சேறு வயல் தேனியிலே
கெட்டித் தரை காணேம்...
பட்டணத்தில் கால் பொளிய
சேறு சுகம் கேட்கும்...
சேறு வயல் மிதித்து வர
கெட்டித் தரை தேடும்...
இங்கிருப்பது அங்கு இல்லை
அங்கிருப்பது இங்கு இல்லை
இல்லை என்பதெங்கு என்று
என் மனசு தேடும்...
இல்லாததைத் தேடுவதில்
கெட்ட சுகம் காணும்.
தேடலது என்னவென்று
இன்று கண்டுகொண்டேன்...
தேடுவதை விட்டுவிட்டுத்
தேடலாக நின்றேன்...

பயணிகள் கவனிக்கவும்

என் மனசுக்குள்ளே சில நாய்கள்.
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக் கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்.
திறக்க நினைக்கும் ஒற்றைக்கை
ஓசை கேட்டு அவை நிமிரும்.
நெருங்கக் காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்.
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்.
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே.
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்.
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
Continued →

பயணிகள் கவனிக்கவும்

நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் மூளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண் வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே, நானாய் கிடந்தபடி...

பயணிகள் கவனிக்கவும்

ஒரு காட்டருவி கரையெழுப்பி
நதியாகப் போச்சு
இது மதுரைக்குப் போகுதென்று
மாமன் வந்து சொன்னார்...
காட்டு நதி கரை வழியே
மதுரைக்குப் போனேன்.
வழியெங்கும் ஊர் முட்ட
திசை மாறலாச்சு.
ஊர் முழுக்க வாய் வலிக்க
மதுரை வழி கேட்டேன்.
கால் பொளிந்து கன்றிவிடும்
தார்சாலை சொன்னார்
தார்சாலை நதி வழியே...
மதுரைக்கு வந்தேன்...
என் காட்டருவி மதுரையிலே
காணாமல் போச்சு.

ராஜபாட்டை

ஊர் சுற்றி ஒரு காலத்தில்
இன்று நானப்படியில்லை
பேர் பெற்ற தலங்கள் நூறு
போகாமல் விட்டதில்லை
துணையென யாருமில்லை
எவருதவியும் கேட்டதில்லை
நதிகளின் தீரம் அலசி
கோட்டைகள் ஏறியிரங்கி
போர் நடந்த வெளிகள்கண்டு
விம்மியே நின்றிருப்பேன்
அரமணை வாசல் தோட்டம்
மலைப்படி கோவில்குளங்கள்
அன்றிருந்த ராஜபாட்டை
அழியாத சிற்பக் கூடம்
இவையெல்லாம் விருப்பக்கணக்கு
மனிதரே வியப்பு எனக்கு.
Continued →

ராஜபாட்டை

மனிதரை அறிந்து கொள்ள
சரித்திரம் படிக்க வேணும்
தன் கால் இடராதிருக்க
மற்றவர் பாதை வேணும்
தமிழன்னை உதவி செய்ய
நானிங்கு சரித்திரமானால்.
அவனழிந்தது பெண்ணாலென்றால்
என் காமம் பம்மியிருக்கும்
புத்தகச் செருக்குயென்றால்
என் புத்தி அடக்கம்கொள்ளும்
சிற்பத்தில் பொறுமை கண்டு
என் படைப்புக் கூர்மையாகும்
அரண்மனை அகலம் கண்டு
அவனெங்கே என்று தேடும்
அத்தனையும் மண்ணாய்போக
அலட்டலகள் யாவும் அபத்தம்
உழைப்பதை மேம்படுத்தி
உயர்வேதும் விரும்பிடாது
Continued →

ராஜபாட்டை

என் கடன் பணியேயென்று
இருத்தலோர் தனித்தசுகமே
காலத்தின் கோலம்கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும்
சிலசமயம் துக்கம் பெருகி
கண்ணீரும் தானாய் வழியும்
நிகழ்காலம் கடந்த காலம்
எதிர்காலம் மூன்றுக்குள்ளே
இருப்பதே மனிதக் கூட்டம்
இதை மீறவே முடியாதையா
சரித்திரம் தெளியத் தெளிய
நிகழ்காலம் உறுதியாகும்
நிகழ்நேரம் உறுதிப்பட்டால்
எதிர்காலம் இடராதிருக்கும்
Continued →

ராஜபாட்டை

எதுவுமே நிரந்தரமில்லை
எல்லாமும் முடியுமோர் நாள்
என்பதை தெளிந்து கொள்ள
எவரோடும் சண்டையில்லை
கருத்தினை அழிக்கும்காதல்
மண் மொழி ஆவேசங்கள்
கைகாசு செருகதிகாரம்
கொண்டவர் நிற்பதில்லை
கலையினை மேம்படுத்திக்
கடவுளைத் தேடிய எங்கும்
மனிதரே இங்கு நின்றார்
அவரையும் காலம் விழுங்கும்
புகழ்ச்சியை விரும்பாத
மனிதரே இல்லை யென்றார்
தவறில்லை உண்மைதானே
மனிதரின் தன்மைதானே
இருப்பினும் மூன்றாம் நதிபோல்
இருப்பதறியாதோட அது
வருத்தங்கள் தறாத பெருமை
வன்முறை சிறிதுமில்லை
Continued →

ராஜபாட்டை

நான் படைப்பவன்
என் பேர் இறைவன்
எனச் சொன்னவன் வேதவித்து
தமிழரின் அழியாச் சொத்து
இது கர்வத்தின் வெளிப்பாடல்ல
உறுதியின் அலட்சியமாகும்
சரித்திரம் அறிந்த மனிதர்
சாதனை செய்து போவார்
அது சாதனை என்றறியாத்தன்மை
அகந்தையே இல்லாமனசு.
நல்லதைப் புரிந்து கொள்வீர்
சரித்திரம் படிக்கத் துவங்கி.
படிப்பென்றால் புத்தகமல்ல
கணிணியைச் சொறிவதல்ல
Continued →

ராஜபாட்டை

துணைக்கென வைத்துக் கொண்டு
நேரடிச் சுற்றுப் பயணம்
பல திக்கும் கொள்வதாலே
பயன்பெறும் உமது வாழ்வு
இப்போது போவதில்லை
முன்பின்னாய் அலைவதில்லை
போனதை மனதில் வைத்து
எழுதுதல் தனித்த சுகமே
சரித்திரம் பெரிதும் விரும்பும்
நண்பர்கள் கூட்டம் பெருகும்
Continued →