என்னிடம் மாடுமில்லை மண்ணுமில்லை.

ஆனாலும் பொங்கல் உண்டு. அது கதிரவன் வழிபாடு. ஆதித்யம் ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசநம்…..நோயே சத்ரு. கதிரே மருந்து.

இரண்டு கரும்புகள் வாங்கி ஒரு சிறிய துண்டும் உண்ணமாட்டோம். பிடிக்காது.

சர்க்கரை, வெண் பொங்கல் கனமான உணவு. தொட்டுக் கொள்ள பலகாய் மொச்சை கூட்டு. மாற்றி மாற்றி உண்.எனவே பொங்கல் என்பது பிற்பகல் தூக்கம்.

அவ்வளவே.மாடுபிடியை டிவியில் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. இத்தனை தூசுல எப்டி இருக்காங்க…? ஐயோ பாவம் மாடு.

இன்று காணும் பொங்கல் வெளிய போகாதே இதுவே இடப்பட்ட கட்டளை. பீச்ல பேய் கூட்டம் டிவில பார்த்துக்கலாம்

ஒரே இடத்தில் அருகருகே வாழ்ந்து எவ்வளவு வித்யாசம்? லோகோ பின்ன ருஸி.

இந்த கூட்டத்துக்கு தீபாவளி என்று சொல்லுங்கள் வாயெல்லாம் பல். நவராத்திரி மிக முக்யம். சரஸ்வதி பூஜையே வெற்றி கொடுக்கும்.

இது இன்னும் பல நூறாண்டுகளுக்கு தொடரும்தானே.

[Jan 14th 2015 முகநூல் பதிவு]