நண்பர்களுக்கு வணக்கம், முகநூலை தகவல் பரிமாறும் தளமாக பயன்படுத்த நினைக்கிறேன்.

பெரிய புத்தகம் போல எழுத வேண்டிய விடயத்திற்கு முன்தகவலாக பேசுகிறேன். அவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்.

பலர்நேரில் சந்திக்க ஆவல் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. உங்க ஆசிர்வாதம் வேண்டும் என்கிறார்கள். நான் எழுத்தாளன். அவ்வளவே. என் எழுத்து மேன்மையை காலம் தீர்மானிக்கும்.

நான் மத போதகனோ மடாதிபதியோ அல்ல. குண்டலினி எழுப்பு, யோகா சொல்லிக் கொடு என்கிறார்கள். வெறுமனே உங்களைப் பார்க்கணும் போதும் என்றும் கேட்கிறார்கள்.

இந்த மயக்கத்திற்கு நான் இடம் கொடேன்.. காரணமில்லாது கார்யம் இல்லை. இருக்கக்கூடாது. வெகு எளிதாக இவர்களை ஏமாற்றி விடலாம்.

ஏமாற்றுவோர் உண்டு. நான் சத்யத்திற்கு கட்டுப் பட்டவன். குரு கடவுள் சத்யம் எல்லாம் ஒன்றே.

என் புத்தகங்கள் என்னை விட சிறப்பானவை இனிமையானவை தெளிவானவை. அவைகளை படித்து தெரிந்து தொடர்ந்து நீங்களாய் போகணும்.

உண்மையில் நானும் என் எழுத்தும் ஒன்றே. என் எழுத்தை மறுபடி மறுபடி படிக்கலாம். எனக்கோ நேரமின்மை. அடுத்த வேலை. 

அவ்ளோ கித்தாப்பா. பார்க்கவே கூடாதா. அப்படியொன்றுமில்லை. பரஸ்பரம் உபயோகமா என்பது கேள்வி.

புரிந்து கொண்டு செயல்படுங்கள். 

மறுபடி வணக்கம்.

(29 டிசம்பர் 2013 முகநூல் பதிவிலிருந்து)