கேள்வி: நான் காதலித்தப் பெண்ணை வேறொரு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.எனக்கு வாழ்க்கை இடி விழுந்தது போல் ஆகி விட்டது.என்னால் அவளை மறக்க முடியவில்லை.

மறந்துதான் ஆக வேண்டும். மறப்பதற்கு எளிய வழி வேறொரு பெண்ணை காதலிப்பது. முடியாது என்று வேகமாகச் சொல்லாதீர்கள். இப்போதைக்கு முடியாது இருப்பது இன்னும் சில நாட்கள் கழித்து முடிகின்ற விஷயமாக இருக்கலாம். அப்போது இன்று நீங்கள் காட்டும் வீம்புகளெல்லாம் கேலிக்குரியனவாகப் போய்விடும். வேறொருவர் மனைவியாக நகர்ந்து விட்ட பெண்ணை நெஞ்சில் சுமப்பதில் லாபமென்ன.

எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடிவிட்டு உங்கள் வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள். காதல் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருப்பதுதான் முக்கியம். கல்யாணத்தில் முடிய வேண்டும் என்பது முக்கியமல்ல. கல்யாணத்தில் முடிந்தால் சரி. இல்லையெனில் என்ன செய்வது, தொடர்ந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டுதான் போக வேண்டும்.