விடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை.

“விடுதலை என்பது அனுசரித்துப் போதல் மதித்தல் பிறர் உணர்வை, உறவை, இருப்பை மதித்தல்.”

“பெண் விடுதலையும் இதே விதமாகத்தான் செயல்பட முடியுமே ஒழிய – செயல்பட வேண்டுமே தவிர, உள்ளாடைகளை வீசி எறிதலில் இல்லை. உங்கள் உள்ளாடைகளுக்கும் உங்கள் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. பட்டு உடுத்துவதோ, பருத்தி உடுத்துவதோ, உங்களை மாற்றிவிடாது.”

“கதருக்கும் – காந்தியத்துக்கும் சம்பந்தம் அறுபட்டது போல, இவ்வுடலை மாற்றங்களில் நீங்கள் காட்டும் விடுதலையும் அறுபடும்.”

உங்கள் இருப்பை, உங்கள் உணர்வை, பிறர் மதித்தலை வற்புறுத்துவார்கள். ஆண்களுக்காகவே உடுத்திக் கொள்கிற பழக்கத்தை பெண்கள் கைவிட வேண்டும்.

“ப்ரா” என்கிற உடை ஆண்களுக்காக மட்டும் தானா. பெண்கள் பெண்களை கவர்வதற்காகவும் அணியப்பபடுவதாய் நான் கருதுகிறேன். பக்கத்து வீட்டு பெண்ணிண் பட்டுப்புடவையை கண்டு பெரும்முச்சு விடும் பெண்களை நான் கண்டிருக்கிறேன்.

“நீங்கள் விடுதலை பெறவேண்டியது எதினின்று உங்களுக்கு தெரிகிறதா… உங்களிடமிருந்தே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.”

-தொடரும்