[Nov 1, 2013 – முகநூல் பதிவிலிருந்து]

மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்தியா வளர்ந்திருக்கிறது.

என் இளம் வயதில் (1963) தீபாவளி பிராமண பண்டிகையாய் இருந்தது. அல்லாதவர் தோசைக்கறியோடு முடித்து கொள்வார்கள். உடை முக்யமேயில்லை. ஆனால் இன்று சகலரும் நன்கு உடை உடுத்தி ஆனந்தமாய் வலம் வருகிறார்கள். வாணவெடிகள் விண்ணை நிறைக்கின்றன. தீபாவளி இந்துக்களின் பண்டிகை ஆகி விட்டது. பண்டிகைகள்தான் மக்களை ஒன்றாக்குகின்றன.

சிலருக்கு கூட்டதிலிருந்து பிரிந்திருப்பதே பிடிக்கும். அவர்கள் சகலமும் எதிர்ப்பார்கள். காலம் சகலத்தையும் விழுங்கும்.

மதம் மொழி கலாச்சாரம் எல்லாம் மாறும்.

ஐம்பது வருடத்தில் தீபாவளியே மாறியிருக்கிறது.

மறுபடி வாழ்த்துக்கள்.

[Nov 2, 2013 – முகநூல் பதிவிலிருந்து]

வணக்கம், நாராயணருக்கும் பூமிக்கும் பிறந்த பிள்ளை நரகாசுரன். வராக அவதாரம் போது இது நடந்தது. கடவுளுக்கு அசுரன் மகனா? ஆம். அசுரர் தேவர் என்பது ஜாதி அல்ல.குணம்.

கெட்டவனை நல்லவர் அழித்தார் என்பதே தீபாவளி. கெட்டவர்கள் திருந்தினார் என்பதே இதில் சிறப்பு..

இனி. வேண்டாம் என கெட்டதுக்கு முழுக்கு போடு. எங்கே. புண்யமான கங்கையில்.கங்கை எங்கே? உன் வீட்டு வென்னீரில். மனதின் இருட்டு விட்டு வெளிச்சம் வா. இதுவே இப்பண்டிகை. கங்கா ஸ்னானம் ஆச்சா!

Good morning to u all and HAPPY DEEPAVALI. Done lot of reading. No sleep கடல் வழி வணிகம்.

திருமயீலைப்பட்டினம் காட்டுறை வீரப்பட்டினமாய் இருந்தது. அதாவது வணிகர் பாதுகாப்பு இடமாக எந்த தேசத்து வணிகரும் வந்து அடைக்கலம் கோரும் துறையாக விளங்கியது. போராலோ புயலாலோ கொள்ளையறாலோ பாதிக்கப் பட்டால் இங்கே இறங்கலாம். ஊர் அருகே என்பதால் உணவுக்கு குறையில்லை. கபாலி கோயில் கோட்டையில் அலைகள் மோதின. வரி வசூலிக்கும் உரிமை மயிலை நானா தேசிகளிடம் இருந்தது. அமைதியான துறைமுகமாய் மயிலை நல்ல நிர்வாகத்தடன் செயல்பட்டது. அந்தணர்களும் வேளாளர்களும் அதிகம் இருந்ததால் இது பட்டிணம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே….

கங்கா ஸ்நானம் செய்தபிறகு கபாலி கோயில் முண்டகக் கண்ணி கோயில் போகோணும். எல்லாம் எங்க சோழ தேசம்.