Loading...

Category Archives: ஆன்மீகம்

திருவிளையாடல் புராணம்

[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …] அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக...

மேலும் படிக்க →

குரு

[குருவழி புத்தகத்திலிருந்து …] ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு...

மேலும் படிக்க →

பிரபஞ்சம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 4

அந்த இடத்தில் அவன் உருவப்படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். கடவுள் பெயரால் பாடல்கள் பாடினார்கள். தூப தீபங்கள் காட்டினார்கள். அந்த வாசனை இங்கு வந்து வீசியது. அந்த ஒளி இங்கே சுற்றியது. ஞானி அவனுக்கு வேறு இடம் சுட்டிக் காட்டினார்....

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 3

அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில்...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 2

பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. “எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள். ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத்...

மேலும் படிக்க →

போர் வீரன்

‌இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்து போனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். வெட்டுப்பட்டுத்தான் ஆக...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 8

ஐந்து வீடுகள் கூட கொடுக்க மாட்டேன். ஐந்து ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்பதால் சண்டையாம். இது யார் நிலம். யாருக்குத் தருவது. என் சொத்து என்று நிலத்தை எப்படிச் சொல்வது. கோடானு கோடி ஜனங்கள் வாழ்ந்து...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 7

காலங்கள் உருண்டன. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல்வேறு காடுகள் காட்ட கூட்டிப் போனான். ஒரு காட்டின் வழியே பெரிய படைகள், தேர்கள், யானைகள் போயின. எங்கோ யுத்தமாம். பிள்ளைகள் பார்க்க ஆசைப்பட்டார்கள். நம்மிடமும் வில், வாள் இருக்கிறதே கலந்து...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 6

“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே” “வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.” “ஏன்?” “அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல...

மேலும் படிக்க →

error: Content is protected !!