இன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம்.

இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம்.

வீட்டுக்கு பலரை விருந்துக்கு அழைத்து விட்டு நிறைய பேர் வந்தூட்டாங்க என்று ஒரு படிப்பாளி கத்துகிறான். என்ன படிப்பு இவனுக்கெதுக்கு படிப்பு. இன்னொருவன் சோறு போடாதீர்கள் துன்னுட்டு திட்டுவான் என்கிறான். இவை தாரித்யங்கள். மனவறுமை. எத்தனை வந்தாலும் போதாது. காசு வராது. காதற்ற ஊசியும் வாராது…

கடை வழிக்கே என்பது புரிய வரும். புரிய பிய்த்துக் கொண்டு கொட்டும்.

சாரி சன்யாசி, இந்த நெல்லிக்காய்தான் இருக்கு. தந்ததும் வந்த ஞானிக்கு துடித்துபோயிற்று. இருந்த உணவையும் தந்தாயா…. நலம் பெறு. தங்க நெல்லிக் கனிகள்.

ஆயிரமாயிரம் பேருக்கு மனதில் எண்ணிக்கை வைக்காது வழங்க…வாங்கிய ஒரு மனம் ஆனந்தமாகி வாழ்த்தும். நீ கேட்டது கேட்காதது நல்லவை வரும். வந்தது உனக்கு எனாமல் மறுபடி வழங்கத் தூண்டும். என்ன மிச்சம்?

இனம் புரியாத சந்தோஷம். நிறைவு. இதன் விளைவு …? எல்லாம் டெம்ப்ரரி என்கிற நிதானம். இறுக்கி வைத்துக்கொள். ஒரு நாள் கொள்ளை போகும். ஐயோ அம்மா என்ன அழுகை எவ்வளவு நோவு.
எல்லா மதங்களும் தானம் என்பதை ஒரு தூணாக வைத்திருக்கின்றன.

நாத்திகம் மேற்கூரை இல்லாதது எனவே தூணும் இல்லை. எது மேற் கூரை? நாளை நல்லன நடக்கும் என்கிற நம்பிக்கை.

நாத்திகம் ஒரு அழுகை. புலம்பல். நாளை விடியும் என நம்பினால் நீ நாத்திகன் இல்லை. அதனால் ஆத்திகனும் இல்லை. உலகில் துக்கமான நிலை இது.

நாத்திகம் பேசுபவர் தன்னை ஆராய வேணும். ஆத்திகன் என அலட்டுபவர் தானம் பற்றி புரிந்து கொள்ள வேணும். சிநேதனை விருந்துக்குக் கூப்டா அவன் வீட்டுக்கு வந்த நாலு பேரையும் கூப்டுகிட்டு வந்துட்டான். அழுகை. என்ன மாதிரி நோயாளி இவன்.

முகநூல் மனிதர்களை இனம் காட்டுகிறது. நல்ல படிப்பு இது.